அருள்தரும் ஆலய தரிசனம் : ஆன்மீக புத்தகம் வெளியீடு
T. Devanathan Yadav
“அருள் தரும் ஆலய தரிசனம்”  என்ற புத்தக வெளியீட்டு விழா சென்னை தி.நகரில் நடைபெற்றது. 101 கோவில்களின் தலபுராணம், கோயிலின் அமைப்பு, விழாக்கள் குறித்து சுருக்கமாக அதே நேரம் தெளிவாக தொகுத்தளித்திருக்கிறார் எழுத்தாளர் சீதா துரைராஜ்.


கோயிலுக்குச் செல்லும் வழி, திறந்திருக்கும் நேரம் போன்றவற்றையும் சேர்த்திருக்கலாம். படங்களும் கூடுதலாய் சேர்த்திருக்கலாம். அடுத்த பதிப்பில் சேர்க்கட்டும்.

எண்பது வயதிலும் உற்சாகமாய் செயல்பட்டு புத்தகத்தைத் தொகுத்த சீதா துரைராஜ் வியப்புக்கும் பாராட்டுக்கும் உரியவர்.

மேலும், “இந்த புத்தக விற்பனை மூலம் கிடைக்கும் வருவாய் முழுவதையும்  பாழடைந்த கோயில் சீரமைப்பு, முதியோர் இல்ல பராமரிப்பு போன்ற சேவைகளுக்காக அளிக்கப்போகிறேன்” என்கிறார் சீதாதுரைராஜ்.