ஆன்மீக கண்காட்சி முன்னிட்டு நடைபயணம் : ஏராளமான மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு
T. Devanathan Yadav
10வது ஆண்டு இந்து ஆன்மீக கண்காட்சி நாளை துவங்க உள்ள நிலையில் அதனை முன்னிட்டு சென்னை சேப்பாக்கத்தில் சுவாமி விவேகானந்தர் நடைபயணம் இன்று நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்து ஆன்மிக மற்றும் சேவை அறக்கட்டளையின் சார்பாக நடைபெற்ற இந்நிகழ்வில் குணச்சித்திர நடிகர் ஜெயப்பிரகாஷ் கலந்து கொண்டார். மாணவர்களிடையே ஒழுக்கத்தை ஏற்படுத்தும் விதமாக இந்த நடைபயணம் அமைந்ததாக நடிகர் ஜெயப்பிரகாஷ் தெரிவித்தார்.